×

பயனற்ற போர்வெல்கள் இனி பலி வாங்க கூடாது: ரேகா நம்பியார், தேசிய பேரிடர் மீட்பு படை தமிழக சீனியர் கமாண்டன்ட்

தமிழகத்தில் வேலூர் மாவட்டம்  அரக்கோணம் அருகே தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் உள்ளது.  இங்கு ஒவ்வொரு குழுவுக்கும் 30 வீரர்கள் வீதம் மொத்தம் 18 மீட்பு படை குழுவினர் உள்ளனர். ஆழ்துளை கிணறுகளில் சிக்குபவர்களையும் காப்பாற்றுவதற்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் வெளிமாநிலங்களில் ஆழ்துளை கிணற்றில் சிறுவர்கள் சிக்கிய 3 சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தமிழகத்தில் திருச்சி மணப்பாறையில் நடந்த 4வது சம்பவத்தில் துரதிஷ்டவசமாக 2 வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்டான்.திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவி தேவை என்று கடந்த மாதம் 26ம் தேதி அதிகாலை 3.49 மணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாலை 4.15 மணிக்கு மீட்பு படை குழுவினர் தேவையான கருவிகள், மீட்பு உபகரணங்களுடன் பஸ், டிரக் ஆகியவற்றில் விரைந்து சென்றனர். அன்று காலை 10.45 மணிக்கு மீட்பு படை குழுவினர் சம்பவ இடத்தை சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்த தீயணைப்பு, மாநில பேரிடர் மீட்பு படை குழுவினருடன் இணைந்து குழந்தை சுஜித்தை மீட்கும் ஆபரேஷனில் ஈடுபட்டனர்.

பல்வேறு மீட்பு கருவிகள் மூலம் ஆழ்துளை கிணறில் சிக்கியிருந்த குழந்தையை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பலகட்ட முயற்சிகள் செய்தும் மீட்க முடியவில்லை. இதையடுத்து குழந்தையை மீட்க மாற்று ஏற்பாடாக ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. 5 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், கடினமாக பாறை இருந்தது. பாறையின் கடின தன்மை மற்றும் எவ்வளவு ஆழத்துக்கு பாறை இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், 55 அடி ஆழம் வரை கடினமான பாறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கடினமான பாறைகளை துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், குழந்தையை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. கடினமான பாறை இல்லாமல், மண் இருந்திருந்தால் எளிதாக பள்ளம் தோண்டி குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்.பேரிடர் மீட்பு சம்வங்கள் நிகழும்போது முதலில் அருகிலுள்ளவர்களை அழைத்து  மீட்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித்  சிக்கியபோது, தீயணைப்பு மற்றும் மாநில மீட்பு படையினரை அழைத்து மீட்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரை  அழைத்து மீட்பு படையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆழ்துளை கிணறுகளை அமைப்பவர்கள் எந்த இடத்தில் அமைக்கின்றனர்? எவ்வளவு ஆழம் அமைக்கின்றனர்? பயனுள்ளதாக இருக்கிறதா? பயனற்று போகிறதா? போன்ற விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் ஆழ்துளை கிணறுகள் போடுவதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். ஆழ்துளை கிணறுகளை போடும் பணியில் ஈடுபடுபவர்களும் இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். இவ்வாறு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்களிடையே பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயனற்ற போர்வெல்கள் இனி பலி வாங்க அனுமதிக்க கூடாது.குழந்தையை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. கடினமான பாறை இல்லாமல், மண் இருந்திருந்தால் எளிதாக பள்ளம் தோண்டி குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்.



Tags : warlords ,Rekha Nambiar ,National Disaster Rescue Force ,Tamil Nadu ,Senior Commandant ,National Disaster Rescue Force Tamil , Useless blankets, Rekha Nambiar, National Disaste, Commandant
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...